நீலகிரி நாடாளுமன்றதேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராமசாமி உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஆ. ராசா எப்போது வேண்டுமானாலும் சிறைக்குச் செல்லலாம் - அமமுக ராமசாமி! - நீலகிரி
ஊட்டி: 2 ஜி வழக்கு நிலுவையில் உள்ளதால் நீலகிரி பாராளுமன்றத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா எப்போது வேண்டுமானாலும் ஜெயிலுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என அமமுக வேட்பாளர் ராமசாமி தெரிவித்தார்.
ammk
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், தற்போது நீலகிரி மாவட்டத்தில் போட்டியிட்டுள்ள திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களை மக்கள் புறக்கணித்து இருப்பதாக கூறினார்.
அதில் திமுக வேட்பாளர் ஆ.ராசா மீது 2 ஜி வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் சிறைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்றும், அதிமுக வேட்பாளர் தியாகராஜன் தொகுதியை பற்றியே தெரியாத வேட்பாளர் என்றும் ராமசாமி விமர்சித்தார்.
Last Updated : Mar 28, 2019, 2:54 PM IST