தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு கூட்டுறவு தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டம் - நீலகிரி

குன்னூரில் இயங்கிவரும் அரசு கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புணரமைப்பு என்ற பெயரில் கடந்த 3 மாதங்களாக பணி வழங்காமல் நிர்வாகம் அலைக்கழிப்பு செய்வதால் தொழிலாளர்கள் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு கூட்டுறவு தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டம்
அரசு கூட்டுறவு தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டம்

By

Published : Dec 19, 2022, 10:58 PM IST

நீலகிரி மாவட்டத்தில் 16 அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் மாலிங்கா மற்றும் கரும்பாலம் கூட்டுறவு தொழிற்சாலையில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக
பணி வழங்காமலும் சம்பளம் தராமலும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தங்களது அன்றாட வாழ்கையை நடத்துவதிலும், குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும் தாங்கள் மிகவும் வேதனை அடைவதாகக் கூறி தொழிலாளர்கள் கூட்டுறவு தொழிற்சாலையின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் போராட்டம் தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:சத்துணவு தேவை: வரும் ஏப்ரல் 1 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்!

ABOUT THE AUTHOR

...view details