நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் காவலர் வெற்றி ஆவார். பர்லியார் பகுதி சோதனைச்சாவடிக்கு காவல் பணிக்கு வெற்றி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வெலிங்டன் பகுதி அருகே சென்றபோது கார் ஒன்று அவரின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த காவலர் வெற்றியை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டுசெல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து கார் ஓட்டுநரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.