நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுபுறப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கரடி காட்டெருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் சர்வ சாதாரணமாக சமீப காலங்களில் உலா வருகிறது.
இந்த நிலையில் குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரிக்கு உட்பட்ட ஆர்மி பள்ளி வளாகத்திற்குள் இன்று அதிகாலை சிறுத்தை புகுந்தது. இதையடுத்து அக்கல்லூரியில் உள்ள சிசிடிவி கேமராவை அலுவலர்கள் ஆய்வு செய்தபோது பள்ளி வளாகத்திற்குள்ளிருந்து சிறுத்தை ஒன்று கேட்டைத் தாண்டி சென்றது பதிவாகியிருந்தது.