நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டுக்கான வனவிலங்கு கணக்கெடுப்புப் பணி நேற்று தொடங்கியது. இதில் புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, உள்ளிட்ட வன விலங்குகளின் கால் தடங்கள், நடமாட்டம், எச்சங்கள் ஆகியவை குறித்து பதிவுசெய்தும் அதற்கான கருவிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. மேலும் இது தொடர்பாக புகைப்படங்களாவும் சேகரிப்படுகின்றன.
வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி தீவிரம் - nilgiri animal census 2020
நீலகிரி: குன்னூர் வனப்பகுதிகளில் வனத்துறை சார்பில் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றுவருகிறது.
வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்!
நான்கு நாள்களுக்கு நடக்கும் இந்தக் கணக்கெடுப்புப் பணி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தன்னார்வலர்களுடன் சேர்ந்து கணக்கெடுக்கப்பட்டுவருகிறது. இந்தக் கணக்கெடுப்பு பணியில், வனத்துறையினர், தன்னார்வலர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், அதிவிரைவு படைக் குழுவினர், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆம்பூர் அருகே சிறுத்தை தாக்கி மான் உயிரிழப்பு?