தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில் பலத்த காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்து சேதம்! - குன்னூர் பலத்த காற்று

நீலகிரி: குன்னூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மின்கம்பங்களில் மரங்கள் விழுந்து மின்தடை ஏற்பட்டது.

electric pole fells
electric pole fells

By

Published : Aug 6, 2020, 2:23 AM IST

நீலகிரி மாவட்டத்தில் கனமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து அப்பகுதிக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குன்னூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இதனால் சேலாஸ், கைகாட்டி, மல்லனூர், பிதாபூர் பேலஸ், ஆப்பிள் பீ, வள்ளுவர் நகர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் மின்கம்பகள் மீது விழுந்தது. இதனால், குன்னூர் நகரம் முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

அதனை மின் வாரிய ஊழியர்கள் சரி செய்தபோதும் பல இடங்களிலும் மின் விநியோகம் சீராகவில்லை. இதனால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும், செல்போன் டவர்களில் மின் விநியோகம் இல்லாமலும், ஜெனரேட்டர்கள் வேலை செய்யாதாலும் நேற்று (5/8/20) மதியம் முதல் மாலை வரை டெலிபோன், மொபைல் சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களும், அரசு துறையாரும் அவசர தகவல்களை பரிமாற முடியாமல் சிரமப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details