தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழை எதிரொலியால் நீலகிரியில் ரயில்கள் ரத்து!

நீலகிரி: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 2ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

railway

By

Published : Oct 31, 2019, 8:01 AM IST

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து ரயில்களும் நவம்பர் இரண்டாம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதேபோல் மலை ரயில் பாதையில் பல இடங்களில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்து தண்டவாளங்கள் சேதமடைந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

நீலகிரியில் கனமழை

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து ரயில்களும் வரும் இரண்டாம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: கனமழையினால் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details