தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேயிலை விவசாயம் பாதிப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நீலகிரி: தேயிலை விவசாயம் பாதிப்படைந்ததால் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By

Published : Feb 3, 2020, 2:56 PM IST

நீலகிரி நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ரமணன் தலைமையில் தேயிலை விவசாயம் பாதிப்படைந்ததையொட்டி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே, பசுந்தேயிலைக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு அகதிகளாக வெளியேறுவதும் மீதமுள்ள விவசாயிகளின் வறுமையை பயன்படுத்தி கந்து வட்டிக்காரர்கள் கொடுமைப்படுத்துவதும், வங்கிகளின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய எந்தவிதமான கடன் உதவிகளும் வழங்காமலும் உள்ளது.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேலும், கோத்தகிரி, குன்னூர்,உதகை, கூடலூர், மஞ்சூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவந்த தேயிலை வாரிய அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேயிலை கலப்படத்தில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கேரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின்போது முன்வைத்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் இதற்கும் மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லையெனில் மாவட்ட மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் சங்கத்தலைவர் ரமணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:காய்கறிகளை சாலையில் கொட்டி உழவர் சந்தை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details