நீலகிரி: குன்னூர் நூற்றாண்டு பழமைமிக்க யுனெஸ்கோ அந்தஸ்துபெற்றது மலை ரயில், பழமை மாறாமல் அதே நிலையில் நூறு ஆண்டுகள் தாண்டியும் தன்னுடைய சேவையை செய்து கொண்டு இருக்கிறது. இந்த மலை ரயிலில் உள்நாட்டு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பயணம் செய்வர்.
அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்யும்போது அழகிய இயற்கை காட்சிகள், பசுமை நிறைந்த காடுகள், மலைகள் நீரோடைகள் மற்றும் ஏராளமான வனவிலங்குகள் என அனைத்தையும் கண்டு ரசித்து இந்த மலை ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். தற்போது இந்த மலை ரயில் பெட்டியை சுற்றுலா பயணிகளின் கண் கவரும் காட்சிகளைப் பார்க்கும் வகையில் கண்ணாடிகள் அமைத்து புதிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.