நீலகிரி:ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில், பல் சக்கரங்கள் உதவியுடன் நூற்றாண்டு காலமாக இயக்கப்பட்டு வருகிறது. மலைப்பாதையில் ரயில் இயக்க ’பிரேக்ஸ் மென்’ பணி மிக முக்கியமானது. மலை ரயிலின் பெட்டிகள் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, 'பிரேக்' பிடித்து இயக்கப்படுகிறது. இதற்காக, ரயிலில், ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு 'பிரேக்ஸ் மேன்' உள்ளனர்.
இதுவரை ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த இப்பணியில் முதல் முறையாக குன்னூரைச் சேர்ந்த 45 வயதான சிவஜோதி என்ற பெண் 'பிரேக்ஸ் உமனாக' பணியமர்த்தப்பட்டுள்ளார். முன்னதாக இவர் குன்னூரில் உள்ள ரயில்வே பணிமனையில் 8 ஆண்டுகளாக கேரேஜ் பிரிவில் பணியாற்றி வந்தார்.