நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் மலை ரயில் உலகப்பிரசித்தி பெற்றதாகும். இந்த மலை ரயில் ஆங்கிலேயர்களால் 1908ஆம் ஆண்டு உதகை வரை நீட்டிக்கப்பட்டது. ஆசியாவிலேயே 22 கிலோ மீட்டர் மலைப்பாதையில் பல சக்கரங்களைக் கொண்டு இயக்கப்படும் ஒரே மலை ரயில் என்ற பெருமைக்குரிய இந்த ரயிலில் 208 பாலங்கள் பதினாறு குகைகள் வழியாக மலை ரயிலில் பயணிப்பது சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக உள்ளது.
யுனெஸ்கோ அந்தஸ்து கிடைத்து 15 ஆண்டுகள் நிறைவு - செயல்படாமல் நிற்கும் மலை ரயில் - ஊரடங்கு உத்தரவு
நீலகிரி: மலை ரயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கப்பட்டடு 15 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தாலும், கரோனா தொற்று காரணமாக தற்போது மலை ரயில் இயக்கப்படவில்லை.
இதன் காரணமாக நீலகிரி மாவட்ட மலை ரயிலுக்கு 2005ஆம் ஆண்டு உலக வரைபடத்தில் இடம்பெறும் வகையில் யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆண்டுதோறும் இதன் விழா குன்னூர் ரயில் நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் தற்போது கரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
நீலகிரி மலை ரயில் 107 ஆண்டுகளுக்கு மேல் தனது பயணத்தை தொடர்ந்துவந்தது. ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ரயில் நிலையத்தில் இந்த மலை ரயில் ஓய்வு எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.