நீலகிாி மாவட்டத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் மண்சாிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலை ரயில் பாதையில் ஆங்காங்கே பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதமடைந்தன.
குன்னுாா் முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மலை ரயில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்தது.