தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்டுப்பாளயம் டூ ஊட்டி மலை ரயில் சேவை 7 நாட்களுக்கு ரத்து! - Nilgiri Hill train service

Ooty Hills train: நீலகிரியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்பட்டு வரும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர் கனமழை..நீலகிரி மலை ரயில் சேவை ரத்து
தொடர் கனமழை..நீலகிரி மலை ரயில் சேவை ரத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 11:20 AM IST

நீலகிரி:தொடர் மழை காரணமாக ரயில் பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்பட்டு வரும் மலை ரயில் சேவை வருகிற 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு தினமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக, நீலகிரி மாவடத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து, மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

தண்டவாளப் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், மழையால் சீரமைப்பு தாமதமாவதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்பட்டு வரும் மலை ரயில் சேவை வருகிற 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தொடர்ந்து தண்டவாளப் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பணிகள் விரைவில் முடிவடையும் நிலையில், மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கும் என ரயில்வே துறையினர் தெரிவித்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக ரயில் பாதையில் மண் சரிவு மற்றும் தண்டவாளத்தின் கீழே மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் மலை ரயில் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மகளிர் உரிமைத் தொகை; இன்று 7 லட்சம் பேருக்கு ரூ.1,000 வரவு.. முதலமைச்சர் தலைமையில் விழா!

ABOUT THE AUTHOR

...view details