தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராணுவ வீரர்களுக்கு  ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி - Nilgiri Helicopter Pilot Training

நீலகிரி: குன்னுார் ஜிம்கானா மைதானத்தில் ராணுவ வீரர்களுக்கு  ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி
ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி

By

Published : Mar 4, 2020, 10:29 PM IST

Updated : Mar 4, 2020, 10:57 PM IST

நீலகிரி மாவட்டம், குன்னூரில் ஜிம்கானா மைதானம் உள்ளது. ராணுவக் கட்டுபாட்டில் இயங்கிவரக்கூடிய இப்பகுதியில், ராணுவ வீரர்களுக்கு ஹெலிகாப்டர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை முதல் நண்பகல் வரை ராணுவ வீரர்களுக்கு ஹெலிகாப்டரை தரையில் இருந்து உயர்த்திச் செல்லும் பயிற்சி, பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் பயிற்சி, அந்தரத்தில் சிறிது நேரம் ஹெலிகாப்டரை நிறுத்தும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

வானில் பறந்து சென்ற ஹெலிகாப்டரை சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்தனர்.

ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி

இதையும் படிங்க: பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி; 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

Last Updated : Mar 4, 2020, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details