நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாகக் கனமழை பெய்த காரணத்தினால் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு, மரங்கள் சரிந்து போக்குவரத்து நெரிசல் எனப் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளானது.
லட்சக்கணக்கில் அழுகிய நிலையில் பூக்கள் நீலகிரியில் அமைந்துள்ள அரசு சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காவில் மழைக் காலங்களில் பூக்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளைச் சரியாகச் செய்யாததால், நடவு செய்யப்பட்டிருந்த லட்சக்கணக்கான பூக்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா தலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மலர்ச் செடிகளைக் கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். பூங்கா நிர்வாகம் மழைக் காலங்களில் பூக்களைப் பாதுகாத்திருந்தால் மலர்கள் அழுகும் நிலை உருவாகிருக்காது. எனவே விரைவில் வரும் காலங்களில் மலர்களைப் பாதுகாக்கும் வழிமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பாட்டில் பிரஸ் மலர்!