தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருக்கலைப்பு மருந்தால் உயிருக்குப் போராடிய பெண்: மருந்துக் கடைக்குச் சீல்வைப்பு - nilgiri health department

நீலகிரி: குன்னூரில் மருத்துவரின் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மருந்து வழங்கிய மருந்துக் கடைக்கு, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள் சீல்வைத்தனர்.

nilgiri
நீலகிரி

By

Published : May 1, 2021, 6:51 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியார் மருந்துக் கடை, கடந்த சில நாள்களுக்கு முன்பு, 23 வயதான பெண்ணுக்கு, மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே கருக்கலைப்புக்கான மருந்தைக் கொடுத்துள்ளார்.

அதை உட்கொண்ட அவருக்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். இது தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கோவை மேற்கு மண்டல மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள், நீலகிரி மாவட்ட சுகாதாரத் துறை உயர் அலுவலர்கள் மேற்பார்வையில் ஆய்வுசெய்து கடைக்குச் சீல்வைத்தனர்.

மேலும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் மருந்து கொடுத்த கடையின் உரிமத்தையும் ரத்துசெய்தனர்.

மருந்துக் கடைக்குச் சீல்வைப்பு

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் கொடுத்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்

இதையும் படிங்க:காஞ்சியில் சகோதரர்கள் வெட்டிக் கொலை:4 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details