நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுப்புறப் பகுதிகளில் பல்வேறு இடங்கள் சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், லெவல் கிராசிங் அருகே இடைச்சேரி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் நோக்கில், வருவாய்த்துறையினர் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.
அந்த வகையில்நிலச்சரிவிலிருந்து காப்பாற்றும் அரிய வகை கிரிசோ போகன் நோடோலிபார்ப் புல் வகை உள்ளிட்டவற்றை குன்னூர் பகுதிகளில் நடவு செய்யும் பணியை வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்க முடியும் என்று அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.