நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகளான கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெள்ளை பூண்டு போன்றவை அதிகளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக நீலகிரியின் தங்கம் என விவசாயிகளால் அழைக்கப்படும் கேரட் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் கேரட் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அது மட்டுமின்றி வெளி மாநிலங்களான பெங்களூரு, கேரளா போன்ற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது நிலவிவரும் கரோனா பரவல் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால், கேரட் தேக்கமடைந்து அழுகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.