தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

படுக இன மக்களின் பாடலுக்கு கரோனா நோயாளிகள் நடனம் - nilagiri district news

நீலகிரி: கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வரும் கரோனா நோயாளிகள் படுக இன மக்களின் பாடலுக்கு நடனமாடும் காணொலி சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.

கரோனா நோயாளிகள் நடனம்
கரோனா நோயாளிகள் நடனம்

By

Published : Sep 29, 2020, 5:39 PM IST

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று (செப்.28) ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனாவால் மொத்தம் 3,807 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2,866 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 917 நபர்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், தனியார் பள்ளிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூடலூர் பகுதியில் கரோனா தொற்றால் அரசு மருத்துவமனை, தனியார் பள்ளிகளில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா நோயாளிகள் நடனம்

இந்நிலையில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகள் மகிழ்ச்சியாக படுகர் இன மக்களின் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்த காணொலியானது சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கரோனா வார்டில் நோயாளிகள் நடனம்!

ABOUT THE AUTHOR

...view details