நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலை தூள், குன்னூர் தேயிலை ஏல மையத்தில் ஏலம்விடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 11ஆவது ஏலத்தில் 40 விழுக்காடு தேயிலை தூள் தேக்கமடைந்தது. தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் பாதிப்பால் தேயிலை தூள் தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது.
ஜனவரியிலிருந்து நடந்த ஏலங்களில், 30 விழுக்காட்டிலிருந்து, 41 விழுக்காடு வரை தேயிலை தூள் விற்கப்படவில்லை.
இதற்கு வடமாநில, உற்பத்தி அதிகரித்ததால், உள்நாட்டு வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் தென்னகத்தை நாடுவதில்லை எனக் கூறப்படுகிறது. ஆகவே மேலும் தேயிலை தூள் தேக்கமடைய வாய்ப்புள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாவட்டம் நிர்வாகம் வேண்டுகோள்!