தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் 683 பேர் தனிமை - மாவட்ட ஆட்சியர் தகவல்

நீலகிரி: மாவட்டத்தில் 683 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல்
மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல்

By

Published : Mar 30, 2020, 7:59 PM IST

Updated : Mar 30, 2020, 8:57 PM IST

நீலகிரியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, "நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ள 733 பேர் வீடுகளில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதில் 50 பேருக்கு கரோனா அறிகுறி இல்லை என்பதால் மீதமுள்ள 683 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

இதுவரை 144 தடையை மீறியதாக 80 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட நபர்களில் இரண்டு பேர் விதிகளை மீறியதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல்

மேலும் தேயிலை தொழிற்சாலைகள் நாளை முதல் செயல்பட அனுமதி அளிக்கபட்டுள்ளதாக கூறிய அவர் ஆதிவாசி கிராமங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க நாளை முதல் டுரோன் கருவிகள் பயன்படுத்தி கண்காணிக்கபடும் என்றும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் கூறினார்.

இதையும் படிங்க: கோவிட்19 தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு தோள் கொடுக்கும் மாற்றுத்திறனாளிகள்!

Last Updated : Mar 30, 2020, 8:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details