தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்னணு வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்!

நீலகிரி: நீலகிரி மக்களவைத் தொகுதியில் 10 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், மின்னணு வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மேற்பார்வையில் நடைபெறுகிறது.

By

Published : Apr 10, 2019, 9:23 AM IST

Updated : Apr 10, 2019, 9:43 AM IST

மின்னணு வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக போன்ற கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட 10 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இங்கு தேர்தல் நடத்துவதற்காக 250 வாக்கு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு குன்னூர் தனியார் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா மேற்பார்வையில், கூடுதல் தேர்தல் அலுவலர் ரஞ்சித் சிங் உட்பட தேர்தல் பிரிவு அலுவலர்கள் தற்போது முதல்கட்ட நடவடிக்கையாக சின்னம் பொருத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், வாக்களிக்கும் இயந்திரங்களை பரிசோதனை செய்யும் பணியும் நடந்துவருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் அனைத்து கட்சியின் முகவர்களும் தங்களது சின்னங்களை சரிபார்க்கும் பணியை கண்காணித்து வருகின்றனர். முதல் முறையாக கொண்டுவரப்பட்டுள்ள சின்னம் பதித்த நகல் இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.

மின்னணு வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

இதில் பணிகள் முடிந்த பிறகு ‘சீல்’ வைக்கப்பட்டு ஏப்ரல் 17ஆம் தேதி இந்த பெட்டிகளை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

Last Updated : Apr 10, 2019, 9:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details