நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து நூற்றாண்டு பழமைவாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டுவருகிறது. யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னம் என்ற சிறப்பைப்பெற்றது இந்த மலை ரயில். ஊட்டி - குன்னூர், குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் இந்த மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டிவருவது வழக்கமான ஒன்று.
இந்த மலை ரயிலை இயக்க தற்போது 7 'எக்ஸ்' கிளாஸ் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டுவருகிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த இன்ஜின்கள் பராமரிப்பதற்கு இதுவரை மிகவும் பழமைவாய்ந்த கிரேன் பயன்படுத்தப்பட்டுவந்தது. பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த கிரேன் மூலம் இன்ஜின்களை கழற்றி பராமரிப்பதில் சிரமம் இருந்தது.