தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 1, 2020, 7:53 PM IST

ETV Bharat / state

ஊட்டியில் ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம்..

நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் புத்தாண்டையொட்டி நடத்தபட்ட பல்வேறு போட்டிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

ஊட்டியில் சுற்றூலாப்பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டம்
ஊட்டியில் சுற்றூலாப்பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் புத்தாண்டு நாளையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க தோட்டக்கலைத்துறை சார்பாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தது. குறிப்பாக அங்குள்ள கண்ணாடி மாளிகை முன்பு பூங்கா ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கு இசை நாற்காலி, சாக்கு பை போட்டி, லெமன் அன்ட் ஸ்பூன் உள்ளிட்ட போட்டிகள் நடத்தபட்டன.

சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தோட்டக்லைத்துறை துணை இயக்குனர் சிவசுப்ரமணியம் பரிசுகளை வழங்கியும், மலர் தொட்டிகளை வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஊட்டியில் சுற்றூலாப்பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டம்

அதனைத் தொடர்ந்து நீலகிரியில் வசித்து வரும் படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கிருந்த படுகர் இன மக்களும், சுற்றுலாப் பயணிகளும் படுக நடனமாடினர். அதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். அதேபோல திரைப்பட பாடல்களுக்கும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நடனமாடி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இதையும் படிங்க;

15ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம் - ஆழிப்பேரலை தந்த ஆறாத வடு

ABOUT THE AUTHOR

...view details