நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் கீழ், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா செயல்பட்டு வருகிறது. சிம்ஸ் பூங்காவில் அரிய வகை தாவரங்கள், பழமை வாய்ந்த மரங்கள் அதிகம் உள்ளன. ஜே.டி.சிம் என்பவரின் பெயரால், 1874ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சிம்ஸ் பூங்காவில், 86 தாவரக் குடும்பங்களைச் சார்ந்த 1,200 வகையான தாவரங்கள் உள்ளன.
மேடு, பள்ளங்கள் உடைய நிலப்பகுதியுடனும், பல்வேறு அம்சங்களுடன் இப்பூங்கா உள்ளது. இதில் நர்சரி பகுதியில் காலியான இடத்தில் தற்போது தோட்டக்கலைத்துறை சார்பில் புதிய பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.