நீலகிரி மாவட்டம் குன்னூரில் 2019 நவம்பர், டிசம்பரில் பெய்த மழையால் பல இடங்களில் வீடுகள் சேதமடைந்தன. அப்பொழுது நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் வசித்து வந்த மக்களை மீட்புக் குழுவினர் அழைத்துச் சென்று சமுதாய கூடங்களில் தங்க வைத்தனர்.
குறிப்பாக கன்னிமாரியம்மன் கோயில், எம்ஜிஆர் குப்பம், சித்தி விநாயகர் கோயில் தெரு ஆகிய பகுதிகள் ஆற்றின் கரையோரம் உள்ளதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு மாற்று வீடுகள் வழங்க அரசு உத்தரவிட்டது.