கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் நரம்பியல் நிபுணர், மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் சென்னையில் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றபோது, அப்பகுதியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் மருத்துவர்கள், மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
டாக்டர் சைமன் உயிரிழப்புக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி - corona latest news
நீலகிரி: கரோனாவால் உயிரிழந்த டாக்டர் சைமனுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் குன்னூரில் மௌன அஞ்சலி செலுத்தினர்.
symon
அதையடுத்து அவரின் மரணத்துக்கு தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, குன்னூரில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் அவரது உயிரிழப்பிற்கு மௌன அஞ்சலி செலுத்தினர். அதில் சமூக இடைவெளியுடன், மெழுகுவர்த்தி ஏந்தி 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க:கணவருக்கு வீடியோ காலில் இறுதி அஞ்சலி செலுத்திய பெண்