நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிளண்ட்டேல் எஸ்டேட் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கக்கூடிய மக்கள் ஆற்றைக் கடந்து, செல்ல சிதலமடைந்த பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆற்றில் வெள்ளம் அதிகம் செல்லும் காலங்களில் இந்தப் பாலத்தைப் பயன்படுத்த முடியாமல், வீட்டிலேயே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் மட்டுமில்லாமல் கிராம மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.