நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. பாதுகாப்பு நிறைந்த இந்த தொழிற்சாலையில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் குண்டுகள், இதர உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு நைட்ரஜன் போன்ற வேதி பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து: 5 பேர் படுகாயம் - வெடிமருந்து தொழிற்சாலை
நீலகிரி: குன்னுார் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
cordite factory fire accident
இந்நிலையில், நேற்று காலை தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் சூரஜ்குமார், ராபின், சற்குணமுரளி, நாகராஜ், ரோஷன் ஆகிய ஐந்து தொழிலாளர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்து அவர்கள் மீட்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சூரஜ்குமார், சற்குணமுரளி ஆகிய இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.