நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்த 15 வயது சிறுமியை போக்சோ வழக்கு தொடர்பாக கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கை விலங்கிட்டு போலீசார் அழைத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கனுங்கோ, உதகை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சரஸ்வதியிடம் நேற்று (நவ.28) நேரில் விசாரணை மேற்கொண்டார்.
இதை அடுத்து, கோத்தகிரியில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங்க் கனுங்கோ தலைமையில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு அமர்வு நடைபெற்றது. இதில் 202 மனுக்கள் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங்க் கானூன்கோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கோத்தகிரியில் கடந்த நவ.7-ஆம் தேதி 15 வயது சிறுமிக்கு காவல் துறையினர் கை விலங்கிட்டு, நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றது தொடர்பாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்குத் தெரிய வந்தது.