நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் உள்ள கிருஷ்ணர் பஜனை மடத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.
அதன்படி இந்தாண்டும் கொண்டாடப்பட்டது. அதில் கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக முகக்கவசம் அணிந்து மகளிர் நவராத்திரி விழாவில் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி கொலுவைத்தும் கொண்டாடி வழிபட்டு மகிழ்ந்தனர்.