தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்திற்காக தேசிய மாணவர் படை "நாடு தழுவிய புற்றுநோய்" என்ற தலைப்பில் இணைய கருத்தரங்கை குன்னூர் தனியார் கல்லூரியில் நடத்தியது. புதுதில்லி இந்திய புற்றுநோய் சங்கத்தின் நோயாளிகள் ஆதரவு குழுவின் இயக்குநர் ரீட்டா பல்லா புற்றுநோய் என்றால் என்ன, வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் எளிமையான மாற்றங்கள் புற்றுநோயைத் எவ்வாறு தடுக்கின்றன, புகையிலை, மது பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கினார்.
புகையிலைக்கு எதிராக குரல் கொடுக்கும் தேசிய மாணவர் படை - நாடு தழுவிய புற்றுநோய்
நீலகிரி: தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு புகையிலைக்கு எதிரான இணைய வழி கருத்தரங்கு குன்னூரில் நடைபெற்றது.
![புகையிலைக்கு எதிராக குரல் கொடுக்கும் தேசிய மாணவர் படை smoking awareness program](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9483005-thumbnail-3x2-06.jpg)
smoking awareness program
இதைத் தொடர்ந்து பண்டிஷோலா வட்டத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தெருநாடகம் நிகழ்த்தப்பட்டது. பொதுமக்களுடன் சேர்ந்து இளைஞர்களுக்கு புகையிலை மற்றும் ஹூக்காவின் விளைவுகள் மற்றும் ஆரம்பகால திரையிடலின் அவசியத்தை தெளிவுபடுத்துகிற விதமாக ஒரு தெரு நாடகத்தையும் அரங்கேற்றினர்.
இதையும் படிங்க:குடோனாக மாறிய வீடு... மூட்டை மூட்டையாக புகையிலைப் பொருட்கள்...