தமிழ்நாடு முழுவதும் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக அங்கன்வாடி பணியாளர்கள், ஊழியர்கள் உறுதிமொழி அளித்து கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன.
மேலும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாய்மார்களும் குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலையை அடைய வேண்டும் என்று ஊட்டச்சத்து, ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துகளை ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று சேர்வதை உறுதிப்படுத்தும்விதமாக குன்னூர் அரசு அலுவலகத்தில் ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.