தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடங்கியது நாகலிங்க மலர்கள் சீசன்! - Today Nilagiri district news

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் நாகலிங்க மலர்கள் சீசன் தொடங்கியுள்ளது.

நாகலிங்க மலர்கள் சீசன்
நாகலிங்க மலர்கள் சீசன்

By

Published : Apr 26, 2021, 10:26 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அரிய வகை தாவரங்கள் காணப்படுகின்றன. மேலும் இங்குள்ள காலநிலையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு மரங்களும் வளர்கிறது.

இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை பர்லியாரில் உள்ள நாகலிங்க மரத்தில் பூத்துக் குலுங்கும் நாகலிங்க மலர்கள் காண்போரை கவர்கிறது. ஆண்டுதோறும் கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் வருகை தரும் சுற்றுலா பயணிகளை இம்மலர்கள் வரவேற்கும்.

ஆனால் இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிக்க ஆளில்லானல் அவை பூத்து கீழே விழுகின்றன.

இந்து மத பூஜை, வழிபாடுகளில் இறைவனுக்கு படைக்கப்படும் பொருட்களில், நாகலிங்க பூக்களும் இருப்பதால் அவற்றை பூஜைகளுக்கு பக்தர்கள் எடுத்து செல்கின்றனர்.

தொடங்கியது நாகலிங்க மலர்கள் சீசன்!

பர்லியார் அரசு தோட்டக்கலை பண்ணையில், நாகலிங்க மலர்கள் தற்போது பூத்துள்ளன. இதன் விதை சேகரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் நடவு செய்ய தோட்டக்கலை துறை முடிவு செய்து உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details