நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே யானைசெத்தக் கொல்லிப் பகுதியிலுள்ள தேயிலை தோட்டப் பணியாளர்கள் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனார். அப்போது அப்பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது, அருகில் சென்று பார்த்தபோது, ஆண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.
மர்மமான முறையில் இறந்துகிடந்த சிறுத்தை! - male leopard
நீலகிரி: கூடலூர் யானைசெத்தக் கொல்லிப் பகுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்த சிறுத்தையின் உடலை மீட்டு வனத் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
மர்மமான முறையில் ஆண் சிறுத்தை பலி
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர், மருத்துவக் குழு சிறுத்தையின் உடலை மீட்டு வனத் துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று, அங்கு வைத்து உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், இறந்த ஆண் சிறுத்தையின் வயது ஆறு எனத் தெரியவந்தது.
உடலில் எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை, எனினும், விஷம் ஏதேனும் வைக்கப்பட்டதா என உடற்பாகங்கள் ஆய்விற்கு அனுப்பி, முடிவுகள் வந்த பின்னர் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.