நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வண்டிச் சோலை பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதி நஞ்சப்பச்சத்திரம். இந்தப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் தேயிலை தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர். இது வனப்பகுதியினை ஒட்டியுள்ள பகுதியாகும். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக மர்மமான முறையில் இங்கு வசிக்கக்கூடிய மக்களின் உடலில் சரும நோய் ஏற்பட்டுள்ளது.
இந்த நோய் தாக்குதல் கால், கை மற்றும் உடல் முழுவதும் பரவி வருகிறது. இதனால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சுமார் 30க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இந்த மர்ம நோயினால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடக்கின்றனர். இதுதொடர்பாக குன்னூர் ஊராட்சி ஒன்றிய மருத்துவர்கள், ஊழியர்கள் கிராமத்தில முகாமிட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.