நீலகிரி மாவட்டம் குன்னூரில் 600க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், கலை குழுவினர் உள்ளனர். கரோனா தொற்று பரவல் காரணமாக திருமணம் காதணி விழா, திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைவான ஆட்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
சோக கீதங்கள் இசைத்து கோரிக்கைகளை வலியுறுத்திய இசைக்கலைஞர்கள் - covid-19
நீலகிரி: திருமணம் காதணி விழா, திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சோக கீதம் இசைத்து இசைக்கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இசைக்கலைஞர்கள் கோரிக்கை
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள இசைக்கலைஞர்கள், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சோக கீதங்கள் இசைத்து தங்களின் நிலையை தெரிவித்தனர். மேலும், வரும் காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 2,104 பேர் பலி - இந்தியாவை மிரட்டும் கரோனா