நீலகிரி: குன்னூர் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக இரவு நேரங்களில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் நிலச்சரிவு; நகராட்சியினர் ஆய்வு - இணைப்பு சாலை இடிந்து விழுந்து சேதம்
குன்னூர் பகுதியில் நான்கு நாட்களாக பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
நீலகிரியில் நிலச்சரிவு
மேலும் குன்னூர் பதினைந்தாவது வார்டுக்கு உட்பட்ட சந்திரா காலனி பகுதியில் இணைப்பு சாலை இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதனை குன்னூர் நகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அவ்வழியாக செல்ல தடை விதித்ததுடன் விரைவில் சாலை சீரமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:மோசமான சாலையால் தொடரும் விபத்துகள் - சாலையைச்சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை!