தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுகாதார ஆய்வாளரை தாக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - நீலகிரியில் சுகாதார ஆய்வாளரை தாக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நீலகிரி: திருவாரூரில் சுகாதார ஆய்வாளரை, பாமக பிரமுகர் தாக்கியதை கண்டித்து குன்னூரில் நகராட்சி ஊழியர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய நகராட்சி ஊழியர்கள்
ஆர்ப்பாட்டம் நடத்திய நகராட்சி ஊழியர்கள்

By

Published : May 12, 2020, 11:52 AM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலத்தை, பாமக பிரமுகர் கவிப்பிரியன் என்பவர் விரட்டிவந்து கத்தியால் கையை வெட்டினார். இதனைக் கண்டித்து திருவாரூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஆய்வாளருக்கு நடந்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பணி செய்யும் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: சுகாதாரத் துறை அலுவலரை கத்தியால் வெட்டிய பாமக பிரமுகருக்கு போலீஸ் வலை!

ABOUT THE AUTHOR

...view details