நீலகிரி: ரிவால்டோ என்ற காட்டு யானை, கடந்த சில ஆண்டுகளாக முதுமலை புலிகள் காப்பகம் அருகேயுள்ள வாழைத்தோட்டம், மாவனல்லா, சொக்கநள்ளி பகுதிகளில் சுற்றித் திரிந்து வந்தது.
இந்த யானைக்குத் தும்பிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால், பிற யானைகளைப் போல் இலை தழைகளைச் சாப்பிட முடியாததால், பெரும்பாலும் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றித் திரிந்து வந்தது.
மரக்கூண்டில் அடைப்பு
இதனால் அச்சம் அடைந்த கிராம மக்கள் ரிவால்டோ யானையைப் பிடிக்க வனத்துறையினரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கிராம மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பின் ரிவால்டோ யானை கடந்த மே மாதம் முதல் மரக்கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிவால்டோ யானையைப் போலவே மேலும் 2 காட்டு யானைகளுக்கு வாழைத்தோட்டத்தைச் சார்ந்த சிலர் உணவு வழங்கி வருவதாகப் புகார் எழுந்ததுள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஒலி பெருக்கி மூலம் எச்சரக்கை... இதனையடுத்து காட்டு யானைகளுக்கு உணவு வழங்குபவர்கள் மீது வன சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதுமலை புலிகள் காப்பகம் சார்பாக நோட்டீஸ் ஒட்டி 3 கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 2) காலை வீதி வீதியாகவும் சென்ற சீகூர் மற்றும் சிங்காரா வனத்துறையினர், ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்ததுடன், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: ஆறுமுகசாமி ஆணையம் ஏன் 3 மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்யக்கூடாது? - உயர் நீதிமன்ற நீதிபதிகள்