நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த முதுமலை புலிகள் காப்பகம சுமார் 688 சதுர கி.மீ பரப்பரளவை கொண்டது. இந்த புலிகள் காப்பாகத்தில் புலிகள், சிறுத்தைகள், காட்டெருமை, மான்கள், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன.
இங்குள்ள வனப்பகுதியை கண்டு ரசிக்க வாகன சவாரியும், யானை சவாரியும் வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி புலிகள் காப்பகம் மூடப்பட்டது.
கடந்த 23ஆம் தேதி தமிழ்நாட்டில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை தவிர மற்ற அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டது.
இதனிடையே நாளை முதல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்டேஷ் தெரிவித்துள்ளார்.