நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் சரணாலயத்தில் யானைகள் முகாம் உள்ளது. அங்கு 25 வளர்ப்பு யானைகள் உள்ள நிலையில், 19 யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டது. யானைகளின் எடையானது சுமார் 150 முதல் 250 கிலோ வரை எடை அதிகரித்திருக்கிறது. காட்டில் நன்றாக மழை பெய்து புற்கள் வளர்ந்தது, யானைகளுக்கு உணவாய் அமைந்து நல்ல ஆரோக்கியத்தை கொடுத்துள்ளது என மருத்துவர் கூறினார்.
முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை..! - mudhumalai
நீலகிரி: முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள யானைகள் முகாமில் இருக்கும் யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டது.
யானை
இதனிடையே திருச்சி சமயபுரத்திலிருந்து வருகை தந்துள்ள மசினி என்ற யானை ஆயிரத்து 900 கிலோ இருக்கும் போது முதுமலைக்கு வந்தது. தற்போது 2,580 கிலோ எடையை அடைந்துள்ளது. தற்சமயம் இப்பகுதியில் உள்ள அனைத்து யானைகளும் நல்ல ஆரோக்கியமாக உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.