கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாகும். இங்குள்ள தெப்பக்காடு, பாம்பேக்ஸ் யானைகள் முகாமில் கும்கி யானைகள் உட்பட 28 யானைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் ஊட்டச்சத்து உணவுகள், மருந்துகள் ஆகியவை யானைகளுக்கு வழங்கப்படுகின்றன. யானைகள் உடல் தகுதியுடன் இருப்பதைக் கண்டறிய வருடத்திற்கு இரண்டு முறை ஒவ்வொரு யானையின் எடையும் அளவிடப்படும்.
யானைகளின் எடை அளவிடும் நிகழ்வு! - elephant weight find machine
நீலகிரி: முதுமலையில் உள்ள 28 யானைகளின் எடையை அளவிட்டு உடல் தகுதி கண்டறியும் நிகழ்வு தொரப்பள்ளி எடைமேடையில் நடைபெற்றது.
![யானைகளின் எடை அளவிடும் நிகழ்வு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4962015-thumbnail-3x2-ha.jpg)
ஒருவேளை யானைகளுக்கு எடை அதிகமானால் உணவு, மருந்து ஆகியவைகளில் கட்டுப்பாடுகளும், எடை குறைந்தபட்சத்தில் அதற்கான ஊட்டச்சத்துகளும் மருந்துகளும் அதிகமாக தருவது வழக்கம். இந்நிலையில், இன்று அதற்கான எடை அளக்கும் நிகழ்வு தொரப்பள்ளி எடைமேடையில் நடைபெற்றது. இரண்டு முகாம்களிலிருந்து வந்த 28 யானைகளுக்கு எடை அளவிடப்பட்டது. இந்நிகழ்வு முடிவடைந்த பின் கடந்த வருடத்தைவிட யானைகள் அனைத்தும் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கால்பந்து விளையாடும் ஜம்போக்கள்!