நீலகிரி மாவட்டத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் ஊட்டி வரையிலான மலை ரயிலில் இயற்கை காட்சிகளை ரசித்து செல்லும், சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் தனியாக வாடகைக்கு எடுத்து சுற்றுலா வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தனியாக ரயிலை ரூ. 2.66 லட்சம் பணம் செலுத்தி, வாடகைக்கு எடுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மலை ரயில் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.