நீலகிரி மாவட்டம், குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இந்த மலை ரயிலில் பயணிக்க, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகைத் தருகின்றனர். இந்தநிலையில், நீலகிரி மலை ரயிலுக்காக சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் புதியதாக 28 பெட்டிகள் தயார் செய்யப்பட்டது.
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே 4 புதிய பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம்! - Nilgiris latest news
நீலகிரி: குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே 4 புதிய பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சோதனை ஓட்டத்திற்காக, 4 பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும்போது, நீர்வீழ்ச்சி, இயற்கை காட்சிகளை எளிதாக கண்டு ரசிக்கும் வகையில், பெட்டிகளின் இரு பக்கவாட்டிலும் அதிகளவு கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஊட்டி மலை ரயில் பழைய இன்ஜின் மூலம் இழுத்து வரப்பட்டு, இந்தப் பெட்டிகளுடன் நேற்று (மே.24) சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: 'கரோனா பரவல் சங்கிலியை உடைப்போம்' முதலமைச்சர் வேண்டுகோள்!