நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய சர்வதேச அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வந்தனர்.
ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து மலை ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மலை ரயில் இயக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று (அக்.07) குன்னூர் - கேத்தி இடையே மலை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.