தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 29, 2020, 9:04 PM IST

ETV Bharat / state

மேட்டுப்பாளையம் டூ உதகை: பழைய முறைப்படி மீண்டும் மலை ரயில் சேவை தொடக்கம்

நீலகிரி: கரோனா பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரயில் சேவை 9 மாதங்களுக்கு பிறகு டிசம்பர் 31ஆம் தேதி முதல் பழைய முறைப்படி இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

மேட்டுப்பாளையத்திலிருந்து உதகமண்டலம் வரை சுமார் 46.5 கி.மீ., தொலைவு கொண்ட மலை ரயில்பாதையின் இருபுறங்களிலும் கண்ணைக் கவரும் அழகிய இயற்கை காட்சிகள் காணப்படுகின்றன. இந்த மலை ரயில் பயணத்தின் போது வனப்பகுதியில் சுதந்திரமாக உலாவும் வன விலங்குகளை கண்டு ரசிக்கலாம்.

மலைப்பாதை தண்டவாளத்தில் பல் சர்க்கரம் மூலம் செல்லும் ரயில் சுற்றுலாப் பயணிகளுக்கு புது அனுபவமாக இருக்கும். செங்குத்தாக செல்லும் இந்த தண்டவாளத்தில் பயணம் செய்வது திகிலான அனுபவம், இதற்காகவே பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஆசியாவிலேயே உதகை மலை ரயிலில் தான் பல் சக்கர தண்டவாளம் உள்ளது.

மீண்டும் மலை ரயில் சேவை தொடக்கம்

இந்த ரயில் பயணத்திற்கு சர்வதேச சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டும் நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனிடையே, தனியார் மூலம் இரண்டு வாரங்களில் 4 முறை மலை ரயில் இயக்கப்பட்டது.

மீண்டும் மலைரயில் சேவை தொடக்கம்

சுற்றுலாப் பயணிகள், மலை ரயில் ஆர்வலர்கள் கோரிக்கையை தொடர்ந்து மீண்டும் மலை ரயில் இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து 31ஆம் தேதியில் இருந்து மலை ரயில் இயக்கம் தொடங்கவுள்ளது.

கால அட்டவணை

முன்பு இயக்கப்பபட்ட நேரங்களிலேயே மீண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை தலா ஒரு முறையும், குன்னுார் - உதகையில் தலா 3 தடவையும் என பழைய முறைப்படி இயக்கப்படும். அனைத்தும் முன்பதிவுடன் கூடிய சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது என தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:வரும் 31ஆம் தேதி முதல் நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details