தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்ட யானைகள்! அவதியில் வாகன ஓட்டிகள் - வாகன ஓட்டிகள்

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

Motorists trouble of Elephants  Motorists trouble  Elephants  nilgris  national highway  யானைகள்  தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்ட யானைகள்  வாகன ஓட்டிகள்  காட்டு யானைகள்
தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்ட யானைகள்

By

Published : Dec 1, 2022, 5:11 PM IST

நீலகிரி :கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காட்டு யானைகள் உலா வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் காலை நேரத்தில் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் குறுக்கே நின்று கொண்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அணிவகுத்து நின்றனர்.

சிறிது நேரத்தில் யானைகள் அருகில் உள்ள புதர் செடிக்குள் சென்றதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து சென்றனர். மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் உலாவரும் யானைகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில், பகல் மற்றும் இரவு நேரத்தில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யானைகள் சாலைகளுக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்ட யானைகள்

இதையும் படிங்க: உரம் விநியோகத்தில் நெருக்கடியில் இருக்கும் மாநிலங்கள்; மத்திய அரசின் மானியம் என்ன ஆனது?

ABOUT THE AUTHOR

...view details