நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள சிம்ஸ் பூங்காவானது அரிய வகை மரங்கள் நிறைந்து 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஸ்பெத்தோடியா, யூகலிப்டஸ், குப்ரைஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கனமழை...சிம்ஸ் பூங்காவில் மரங்கள் சாய்ந்தன! - coonoor simspark trees
நீலகிரி: குன்னூர் பகுதியில் நேற்று பெய்த கனமழையில் சிம்ஸ் பூங்காவில் இருந்த பத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.
தாவரவியல் மாணவர்கள் வேளாண்மை மாணவர்கள், பறவை ஆர்வலர்கள் இங்கு வந்து மரங்கள் குறித்து குறிப்பெடுத்துச் செல்கின்றனர். தற்போது பெய்த கனமழையால் குன்னூர் பகுதியில் உள்ள சிம்ஸ் பூங்காவில் பத்திற்கும் மேற்பட்ட ஸ்பேத்தோடியா, யூகலிப்டஸ் உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனை வனத்துறையினர் அப்புறப்படுத்தினர்.
வேரோடு சாய்ந்த மரங்களின் வகைகளை மீண்டும் பூங்காவில் நடவு செய்து பராமரிக்க வேண்டும் என்பது அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.