நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அருகே உள்ள தோட்டக்கலை பண்ணையில் பல்வேறு வகையிலான மரங்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன. இதில் ஊட்டி ஆப்பிள், பேரிக்காய், மாதுளை, பெர்சிமன் பீச் பழம் உள்ளிட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகின்றன. தற்போதுள்ள 60க்கும் மேற்பட்ட மரங்களில் பேரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. மரங்களிலிருந்து 1,000 கிலோவிற்கும் மேல் பேரிக்காய்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.
சிம்ஸ் பூங்காவில் தொடங்கிய பேரிக்காய் அறுவடை - Nilgiris coonoor
நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் வளர்க்கப்படும் பேரிக்காய் மரங்களிலிருந்து ஆயிரம் கிலோவுக்கு மேல் பேரிக்காய்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.
Nilgiris pear cultivation
இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழ வியாபரிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மலைப் பிரதேசத்தில் விலையும் பேரிக்காய்கள் ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்தை அளிக்கின்றன. மேலும் பேரிக்காய்களில் ஜாம், ஜெல்லி போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன.